ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியல் நீங்கள் ஆதார் பதிவு செய்ய அல்லது உங்கள் ஆதார் தகவல்களை புதுப்பிக்க விரும்பினால், இவற்றிற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் முழு பட்டியலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்புக்கு, ஒரு நபரின் அடையாளம், முகவரி, உறவு, பிறந்த தேதி போன்றவற்றை சரிபார்க்க குறிப்பிட்ட ஆவணங்களை யுஐடிஏஐ ஏற்றுக்கொள்கிறது. விண்ணப்பதாரர்கள் யுஐடிஏஐ பரிந்துரைத்தபடி அடையாளச் சான்று (Proof of Identity - PoI) மற்றும் முகவரிச் சான்று (Proof of Address - PoA) ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனிநபரின் வயதின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் கீழ்கண்ட வாறு வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்து ஆதார் மையங்களிலும் துல்லியமான சரிபார்ப்பை உறுதி செய்ய உதவும். இந்த பிரிவுகள் பின்வருமாறு: முதலாம் பட்டியல்:5 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பதிவு செய்வதற்கான அடையாளம், முகவரி, உறவு அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரத்திற்கு சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்கள். இரண்டாம் பட்டியல்: 5 வயதிற்கு மேற்பட்ட, ஆனால் 18 வயதிற்குட்பட்ட நபர்களின் ஆதார் பதிவிற்கான அடையாளம், முகவரி, உறவு அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரத்திற்கு சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்கள். மூன்றாம் பட்டியல்:18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான அடையாளம், முகவரி, உறவு அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரத்திற்கு சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்கள். நான்காம் பட்டியல்: எந்தவொரு வயதினரின் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் தகவல்களைப் புதுப்பிப்பதற்காக அடையாளச் சான்று, முகவரி, உறவு அல்லது பிறந்த தேதி ஆகியவற்றை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்கள். மேற்கூறிய வகைகளின்படி, பரந்த அளவிலான பிஓஐ மற்றும் பிஓஏ ஆவணங்கள் யுஐடிஏஐ ஆல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியல் பார்வையிட, இங்கே கிளிக் செய்யவும் அல்லது கீழ் கண்ட QR code ஸ்கேன் செய்யவும்