ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் கைரேகைகள் மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் ஆகியவை அந்த வயதில் முதிர்ச்சியடையாததால் ஆதார் பதிவுக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, தற்போதுள்ள விதிகளின்படி, கைரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படம் ஆகியவை குழந்தை ஐந்து வயதை அடையும் போதும், மீண்டும் 15 வயதை அடையும் போதும் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டும். இது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) என்று அழைக்கப்படுகிறது. இது 2026 செப்டம்பர் 30 வரை 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் கொண்ட ஆதார், வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் பின்வரும் சேவைகளைப் பெறுவதில் ஆதார் தடையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது: பல்வேறு நிறுவனங்களில் நுழைவு நுழைவுத் தேர்வுகளுக்கு பதிவு செய்தல் அரசு நலத்திட்டங்கள் கல்வி உதவித்தொகை பயிற்சிப் படிப்புகள் மற்றும் உதவித்தொகை