காஞ்சிபுரத்தில் ஆதார் சேவை மையம் தொடக்கம் காஞ்சிபுரம் நகரில் வசிப்பவர்களை மையமாகக் கொண்டு ஆதார் சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் காஞ்சிபுரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆதார் சேவை மையத்தை 17 ஜூலை 2026 அன்று செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. காஞ்சிபுரம் ஆதார் சேவை மையமானது, ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தடையற்ற ஆதார் சேவைகளை வழங்கும் வகையில் 8 செயல்பாட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளது. பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இம்மையம் செயல்படுவதால், மக்களுக்குச் சிறந்த வசதியும் சௌகரியமும் உறுதி செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தனித்துவ அடையாள ஆணையத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 21 ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன; இதன் மூலம் மாநிலத்தில் ஆதார் சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும். முன்பதிவு இணையதளம் தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலம், ஆதார் சேவை மையங்களில் சேவைகளைப் பெறுவதற்கான நேரத்தை (அப்பாயிண்ட்மெண்ட்) ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்